பிரபல நடிகைகளின் நிர்வாணப் படங்களை ஹேக் செய்த ஹக்கர்ஸ் : இணைய சேவை பாதிப்பு!!

274

Act
ஹொலிவுட் பிரபலங்களின் நிர்வாணப் படங்களை பார்க்க கடும் போட்டி நிலவியதால், இணையமே முடங்கிபோயுள்ளது.

ஹொலிவுட் நடிகை ஜெனிபர் லோரன்ஸ், பொப் பாடகி ரிஹானா உள்ளிட்ட பிரபலங்களின் அப்பிள் போன்களை ஹேக் செய்த சிலர், அதிலிருந்த நிர்வாணப் படங்களை இணையத்தில் வெளியிட்டனர்.

மேலும் ஜெனிபரின் போனை ஹேக் செய்தவர் மேலும் பல படங்களை வெளியிட போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நியூசிலாந்தில் வாழும் சிலர் பிரபலங்களின் நிர்வாணப் புகைப்படங்களை பார்க்க இணையதளத்தில் உள்ள சில லிங்குகளை கிளிக் செய்தனர்.

அந்த லிங்குகளை கிளிக் செய்ததும் கணனிகளை முடக்கும் மல்வேர் புரோகிராம்கள் தரவிறக்கம் ஆகின இதனால் இணையச்சேவை பாதிக்கப்பட்டது.

இதனை சரிசெய்ய நியூசிலாந்தின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 3 நாட்கள் ஆனதாம். இந்த சைபர் தாக்குதல் நியூசிலாந்துக்கு வெளியே இருந்து நடத்தப்பட்டுள்ளது என்றும், யார் என்பது தெரியவரவில்லை எனவும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.