திருகோணமலையில் கரையொதுங்கிய மர்ம தெப்பம்!!

21

திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் இன்று (14) பௌத்த அடையாளங்களைக் கொண்டு தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இத்தெப்பம் பௌத்த அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றது.

பௌத்த பூஜை வழிபாடுகளின் பின் கடலில் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை கடந்த காலங்களிலும் இவ்வாறான தெப்பங்கள் , இலங்கை கரையோர பகுதிகளி கைரஒயொதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.