
கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மீது அவதூறு கருத்து தெரிவித்த நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குறித்து நடிகையும் மாடல் அழகியுமான குஷி முகர்ஜி தெரிவித்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குஷி முகர்ஜியிடம் கிரிக்கெட் வீரர்களை காதலிக்கும் விருப்பம் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது,
அதற்கு பதிலளித்த போது “எனக்கு கிரிக்கெட் வீரர்களை டேட்டிங் செய்வதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை, ஆனால் பலர் என்னிடம் தொடர்ந்து பேச முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
அப்போது கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் பெயரை குறிப்பிட்டு பேசிய குஷி, அவர் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து மற்றொரு நாள், தங்களுக்குள் தற்போது எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், இதில் காதல் எதுவும் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளார், மேலும் சூர்யகுமார் யாதவ் மரியாதையான வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குமார் யாதவ் மீது அவதூறு கருத்து தெரிவித்த நடிகை குஷி முகர்ஜி மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.
நடிகை குஷி முகர்ஜிக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் காவல் நிலையத்தில் மும்பையை சேர்ந்த பைசான் அன்சாரி என்ற நபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புகாரில் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக விளையாட்டு வீரரின் புகழுக்கு நடிகை குஷி முகர்ஜி அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.





