லண்டனில் யாழ்.பெண்ணை குத்திக் கொன்ற கணவன் : நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

25

பிரித்தானியாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இலங்கைபெண் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 44 வயது நிலானி நிமலராஜா, 47 வயது கணவன் நிமலராஜா மூலம் 2025 ஜூன் 20ஆம் திகதி கொலை செய்யப்பட்டதாக செய்யப்பட்டுள்ளார்.

நிலானி நிமலராஜா, மூன்று பெண் குழந்தைகளின் தாயாவாக இருந்தார். சம்பந்தப்பட்ட தகவல்களின் படி, நிமலராஜா போதைக்கு அடிமையானவர். தொடர்ச்சியான அடிமை மற்றும் குடும்பத்தில் காணப்பட்ட வன்முறையின் காரணமாக, நிலானி கணவனை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

அத்துடன் மூத்தமகள் மற்றும் நிலானிக்கு இடையில் தலை காட்டக்கூடாது என லண்டன் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதையடுத்து, 2வது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் மற்றும் பிற குடும்பக் கொண்டாட்டங்களில் நிலானி கணவனை அழைக்கவில்லை. இதனால் நிமலராஜாவின் மனத்தில் கடும் வெறி உருவானதாக கூறப்படுகிறது.

குற்றவாளி அஜ்ரா நிமலராஜா, மனைவியை கொலை செய்யும் நோக்கில் பல்வகை கத்திகளையும் பவுங்லிங் கடையில் வாடாகும் நாடாவையும் வாங்கியதாகவும், முகக்கவசம் அணிந்து அடையாளத்தை மறைத்ததாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், நிமலராஜா நிலானி வேலை செய்த கடைக்கு சென்று, வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் நிலானியின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியை 18 முறை குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் கத்தியின் நுணி பாகங்கள் வளைந்து நெளிந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நிமலராஜா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.

குற்றவாளி தனது குற்றத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த வாரமும் நீதிமன்றில் நிமலராஜா தொடர்பான வழக்கு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.