வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரி பெற்றுக்கொள்வதில் சிரமம்!!

32

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை வீதியில் இயக்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டாய வரி ஆகும். இது வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும் போது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

எனினும் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமைகளில் மதியத்திற்கு பின்னர் இச்சேவையினை பெற முடியாமால் இருப்பதுடன், வேறு நாட்களில் மதிய உணவுக்குக்காக என ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக மூடப்பட்டிருப்பதுடன்,

சில நாட்களில் தொழிநுட்பக் கோளாறு என வவுனியா பிரதேச செயலகத்திற்கு செல்லுமாறு பொதுமக்களை சிரமத்திற்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாம் வாகன வருமான வரி பத்திரத்தினை பெற முடியாமையினால் போக்குவரத்து பொலிஸாரினால் தண்டப்பத்திரம் பெற வேண்டிய நிலமையினையும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.