இலங்கையில் தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!!

388

கடந்த வாரம் முதல் தங்க விலையில் மாற்றம் ஏதும் நிகழாத நிலையில், இன்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.