ஹன்சிகாவால் அதிர்ச்சியடைந்த நாயகிகள்!!

484

Hansika

கொலிவுட்டில் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருபவர் ஹன்சிகா. படங்களுக்கா அவர் உடல் எடையை கூட குறைத்து விட்டார்.

சமீபத்தில் ஹன்சிகா கூறுகையில், தமிழில் மட்டும் 8 படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளேன். அதோடு தெலுங்கிலும் நல்ல கதைகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பது வசதியாக உள்ளது. இந்தி படங்களில் நடிக்கும் ஆசை எனக்கு இல்லை.

இந்தி படங்கள் எனக்கு முக்கியமும் இல்லை. பொலிவுட்டில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் தான் ஏற்கவில்லை என்றார் ஹன்சிகா.

கொலிவுட், டொலிவுட் நடிகைகள் பொலிவுட்டிற்கு செல்ல விரும்புவார்கள். ஆனால் ஹன்சிகாவின் இந்த பேச்சு மற்ற நடிகைகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.