கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய நடிகை : விளாசும் இணையவாசிகள்!!

22

கோயிலில் நாய்க்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிரபல நடிகை Deena Sravya வை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

நடிகையின் இந்த செயல் இந்து மதத்தை அவமதிக்கும் நடவடிக்கை என்றும், இந்த சம்பவத்திற்கு நடைகை மன்னிப்பு கோர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வெளிவந்துள்ளது.

தெலங்கானாவில் உள்ள மேடாரம் பகுதியில் சம்மக்கா-சாரக்கா அம்மன் திருவிழா வெகு பிரசித்தி பெற்றதாகும். இவ்விழா எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்தி கடனாக அம்மனுக்கு வெல்லத்தை எடைக்கு எடை துலா பாரம் செலுத்துவது ஐதீகம். இப்பண்டிகையை கொண்டாட தெலங்கானா அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.

இவ்வளவு பிரசித்தி பெற்ற அம்மன் விழாவிற்கு “கமிட்டி குர்ரோள்ளு’ ‘ப்ரீ வெட்டிங் ஷோ’ ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை யான டீனா ஸ்ரவ்யாDeena Sravya , தனது தாயார் மற்றும் நாய்க்குட்டியுடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர், தனது செல்ல நாய்க்குட்டிக்கு எடைக்கு எடை வெல்லத்தை நேர்த்தி கடன் செலுத்தினார்.

இது தற்போது விவாதமாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியதால், பக்தர்கள் நடிகையின் செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் நடிகையின் தாயார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்குட்டிகளை தங்களின் பிள்ளைகளை போல் பாவித்து வளர்த்து வருவர். அதுவும் அந்த வீட்டின் ஒரு உறுப்பினர்தான்.

அதனால் தான் அதற்கு சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் போனது. அதனால் தான் அம்மனுக்கு எடைக்கு எடை வெல்லம் கொடுத்து நேர்த்தி கடன் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இது கோயிலையும், இந்து கலாச்சாரத்தையும் அவமானப்படுத்தும் செயல் என நடிகையின் செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.