மனநலம் குன்றிய மகளை வல்லுறவு செய்த சிறிய தந்தை கைது!!

593

Abuseமனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யுவதியின் சிறிய தந்தை என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். மாம்புரிய – சேதாபொல பகுதியில் வசிக்கும் குறித்த யுவதி 5 மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யுவதி வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரை மிரட்டி சிறிய சந்தை இந்த குற்றத்தை புரிந்துள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.