தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவன் : மனைவி எடுத்த அதிரடி நடவடிக்கை!!

43

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் தன் கணவனை பெண்ணொருவர் கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள Hamidpur என்னும் கிராமத்தில், பிரதீப் என்னும் நபர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்குவருவதால் அவரது மனைவியான சோனி என்னும் பெண் அவரை கட்டிலுடன் கட்டிப்போட்டுள்ளதையும், அவரது தாய் மகனின் கட்டுகளை அவிழ்த்து அவரை விடுவிக்க முயல்வதையும் அந்த வீடியோவில் காணலாம்.

இதற்கிடையில், பிரதீப்பின் தாயான சுமன், வேறொரு பகீர் செய்தியை வெளிக்கொணர்ந்துள்ளார். அதாவது, தன் மகனை அவரது மனைவியான சோனி அடித்து உதைப்பது வழக்கம் என்றும், சோனியிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி உள்ளதாகவும், அதைக் காட்டி அவர் பிரதீப்பை மிரட்டுவதுண்டு என்றும் பொலிசில் புகார் செய்துள்ளார் சுமன்.

ஆயுதம் வைத்துள்ளதாகக் கூறப்படும் புகாரை சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார் அது தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.