வடக்கு முதல்வர், சுகாதார அமைச்சர் இருவருக்கும் ஆளுனரால் வாகனம் கையளிப்பு!!

315

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கா​ன வாகனங்கள் இன்றைய தினம் கையளிக்கப்ப​ட்டுள்ளன.

குறித்த வாகனங்களை வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, முதலமைச்சரி​ன் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சரின் செயலாளர் ஆகியோரிடம் கையளித்துள்ளா​ர்.

முதலமைச்சருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள வாகனமும் சுகாதார அமைச்சருக்கு 7 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள வாகனமும் கையளிக்கப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் வாகன கொள்வனவுக்கு என வரவு செலவுத் திட்டத்தில் தலா 58 இலட்சம் ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் இருந்தே குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர்கள் வருகை தராத காரணத்தினால் அவர்களுக்கான செயலாளர்களிடம் வாகனங்கள் கையளிக்கப்பட்டன.

1 2 3