புதிய வரலாறு படைக்கும் தங்கம் : பாபா வங்கா கணிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்!!

465

பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கான சில கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

அவரது கணிப்பின்படி, உலக அளவில் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு வங்கிகள் பாதிக்கப்படலாம் என சமூக வலைத்தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் ஒரு நிலையற்ற தன்மை உருவாகும் என்று பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாரம்பரியமான மற்றும் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கித் தள்ளும். இதனால், தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்து ஒரு புதிய உச்சத்தை எட்டும் என்றும் சில கணிப்புகள் கூறுகின்றன.

ஆனால், பாபா வங்காவின் இந்தக் கணிப்புகள் வெறும் யூகங்களே தவிர, அவற்றுக்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமோ அல்லது வரலாற்றுப் பதிவுகளோ இல்லை என்று ஆய்வாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

வட்டி விகிதங்கள் உலக வட்டி விகிதங்கள், பணவீக்கம், அரசியல் பதற்றங்கள், மத்திய வங்கிகளின் கொள்கைகள் எனப் பல காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆகவே, முதலீட்டாளர்கள் வெறும் வதந்திகளைக் கேட்டு பீதியடையாமல், மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதேவேளை இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலையில் நான்கு இலட்சம் ரூபாவை கடந்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தொடர் அதிகரிப்பு பதிவாகி வரும் நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி இன்றைய நிலவரப்படி (28.01.2026) உலக சந்தையில் தங்கத்தின் விலை 5250 டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவலின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 374,600 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 405,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.