பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் : ஆய்வில் தகவல்!!

674

FB

பேஸ்புக்கில் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பேஸ்புக் பயனாளிகள் குறித்த ஆய்வை அமெரிக்காவின் டுஸ்கலூசா (Tuscaloosa) பகுதியில் உள்ள அல்பமா (Universtiy of Albama) பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் பவிகா செல்டன் (Pavika Seldon) கூறியதாவது, நிஜ வாழ்க்கையில் கூச்ச சுபாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பேஸ்புக்கில் தங்கள் உலகத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்.

முகத்தை வெளியே காண்பிக்காமலேயே, உலகில் என்ன நடக்கிறது என்பதை வேவு பார்க்க முடியும் என்பதால் கூச்ச சுபாவத்தினருக்கு பேஸ்புக் சொர்க்கமாக தெரிகிறது. அதே நேரம் என்னதான் பேஸ்புக்கில் கிடையாய் கிடந்தாலும், நிஜ வாழ்க்கையை போலவே பேஸ்புக்கிலும் அவர்கள் அமைதியானவர்களாகவே உள்ளனர்.

புகைப்படங்கள், ஸ்டேட்டஸ் போன்றவற்றை பகிர்ந்து கொள்வது மிகவும் குறைவாகும். பிறரது நிலைதகவல்களை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். ஆனால் ஏதாவது விவாதம் நடந்தால் நம்மால் அதில் பங்கேற்று அவமானத்தை சந்திக்க முடியாது என்று நினைத்து அதில் பங்கேற்பதில்லை.

எனவே கூச்ச சுபாவத்தினருக்கு பேஸ்புக் மேலும் கூச்ச சுபாவத்தையே பரிசளிக்கிறது என்றும் சுட்டித்தனம் கொண்டவர்கள் மேலும் சுட்டியாக இருக்கவும் பேஸ்புக் உதவுகிறது எனவும் கூறியுள்ளனர்.