72 ஆண்களுக்கு பிறகு இணைந்த ஓரினச்சேர்க்கைப் பெண்கள்!!

636

அமெரிக்காவில் 72 ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கை ஜோடிகளாக வாழ்ந்த இரு பெண்கள் கடந்த சனிக்கிழமை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தை(Iowa) சேர்ந்த விவியன் பொயாக்(91) மற்றும் அலிஸ் நோனை ட்யுப்ஸ்(90) இணையருக்கு டேவன்போர்ட்டில் (Davenport) உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் பெண் மதகுரு ஒருவர் இந்த திருமணத்தை செய்து வைத்து ஆசி வழங்கினார்.

ஐயோவா மாநிலத்தில் உள்ள ஏல்டவுன்(Yale)பகுதியில் தங்களது இளமை ததும்பும் 18 வயதில் சந்தித்துக் கொண்ட விவியன் பொயாக்கும் அலிஸ் நோனை ட்யுப்ஸும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொண்டு அன்று முதல் ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

பின்னர், 1947ம் ஆண்டு வாக்கில் டேவன்போர்ட் பகுதிக்கு குடிபெயர்ந்து, அங்குள்ள பள்ளியொன்றில் பொயாக் ஆசிரியையாகவும், ட்யுப்ஸ் தனியார் நிறுவன ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள், கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளில் உள்ள பல பகுதிகளை உல்லாசப் பறவைகளாக சுற்றிப் பார்த்து, தங்களது 90 வயதை கடந்த நிலையில் 72 ஆண்டுகள் இணைபிரியாமல் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு மேல் திருமணமா என்ற கேள்விக்கு சக்கர நாற்காலிகளில் அமர்ந்தபடி ‘வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்க இன்னும் காலம் மிச்சம் உள்ளது’ என்று இந்த புதுமண தம்பதியர் சிரித்தபடி கூறுகின்றனர்.

L1 L2