
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக சரிவதற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4737 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் (03) 12,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.அதேநேரம், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 349,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதற்கமைய,24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 380,000 ரூபாவாகவும், பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.





