தங்கம் வாங்க காத்திருந்தோருக்கு சாதகமான செய்தி : இன்று பதிவாகியுள்ள விலை நிலவரம்!!

369

கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 356,100 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 385,000 ரூபாவாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,870 முதல் 4,890 அமெரிக்க டொலர் என்ற மதிப்பீட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் வரலாற்றில் முதன்முறையாக உலக சந்தையில் தங்க விலையானது 5000 அமெரிக்க டொலர்களை தாண்டியிருந்தது.

அதேவேளை இலங்கையிலும் வரலாற்றில் முதன்முறையாக 4 இலட்சம் ரூபாவை எட்டியிருந்தது தங்க விலை. இவ்வாறான சூழலில் தற்போது தங்க விலையில் வீழ்ச்சிப் போக்கு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.