
தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியில் திகம்பதஹா பிரதேசத்தில் புதன்கிழமை (4) பிற்பகல் இரண்டு காட்டு யானைகள் நடுவீதியில் சண்டையிட்டுக்கொண்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரதேசவாசிகளும் வாகனங்களில் பயணித்தவர்களும் அச்சத்தில் இருந்துள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். திகம்பதஹா பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.





