
யாழ் இளம் பெண் ஒருவர் தையல் கலையில் 15 நிமிடங்களுக்குள் தனது அபார திறமையை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண் ஜெயந்தன் மேரி சுலக்சனா, உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்து பெருமை சேர்த்துள்ளார்.
இலங்கை மகளிரின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) கொழும்பில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் வழங்கப்பட்ட சிறப்புப் பணியை ஜெயந்தன் மேரி சுலக்சனா வெறும் பதினைந்து நிமிடங்களுக்குள் வெற்றிகரமாக செய்து முடித்ததன் மூலம் இந்த உலக சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில் இந்த அபூர்வ சாதனையைத் தொடர்ந்து அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.





