வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பரிதாபமாக பலி!!

2014

வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் இன்று (06.02.2026) தெரிவித்தனர்.

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்றைய தினம் (05.02.2026) இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார்.

இவ் விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கரிஸ்ணன் (வயது 16) என்ற மாணவனே மரணமடைந்தவராவார். இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர்.