
கடந்த நாட்களில், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட பெரிய சரிவுக்கு பின்னர் தங்கத்தின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்தொட்டுள்ளது.
அதன்படி, இன்று (07.02.2026) தங்கத்தின் விலை 2,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கம் 392,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,325 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி பாதுகாப்பான புகலிட சொத்துக்களாக தொடர்ந்து செயல்படும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
சமீபத்திய கருத்துக் கணிப்பின் படி, 2025 ஆம் ஆண்டு சாதனை படைத்த நிலையில், 2026 ஆம் ஆண்டு தங்கம் நல்ல நிலையில் இருக்கும் என்று கணித்துள்ளது.
உலகளாவிய மத்திய வங்கிகளின் கொள்முதல் தங்க விலை உயர்வுக்கு தொடர்ந்து பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





