இலங்கையில் பெரும் சோகம் – இளம் தாயும் மகளும் பரிதாபமாக பலி!!

644

கண்டியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கலஹா, நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தில் இருந்து கறிவேப்பிலை பறித்துக் கொண்டிருந்தபோது, ​​அறுந்து விழுந்த மின்சார கம்பியின் ஊடாக மின்சாரம் பாய்ந்து இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.