
மூன்று ஆண்டுகளாக தான் கதாலித்துவந்த பெண், தனக்கு திருமணம் என்று கூறி திருமண பத்திரிகை வைத்ததால், ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள இயலாமல் துயர முடிவொன்றை எடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த கிரண், காதலர் தினத்துக்காக தனது காதலிக்கு பெரிய பரிசொன்றைக் கொடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருந்தார். சனிக்கிழமையன்று, தன் காதலரை பார்க்க வந்தார் அந்தப் பெண். அவர் கொடுத்த சர்ப்ரைஸை கிரணால் தாங்க இயலவில்லை.
ஆம், தனது திருமண பத்திரிகையைக் கொடுப்பதற்காக வந்திருந்தார் அந்தப் பெண். தனக்கு ஏற்கனவே வேறொருவரும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகக் கூறி, திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுச் சென்றார் அந்தப் பெண்.
சோகத்தில் தன் அறைக்குள் சென்று உள் பக்கமாக கதவைப் பூட்டிக்கொண்ட கிரணை, பிறகு சடலமாகத்தான் பார்த்தார்கள் அவரது பெற்றோர்.
அந்தப் பெண்ணின் குடும்பம் வாங்கியிருந்த 50 லட்ச ரூபாய் கடனை அடைக்க உறுதியளித்திருந்தாராம் கிரண்.
அவர் அந்தப் பெண்ணுக்கு காதலர் தின பரிசு கொடுப்பதற்காக தயாராகிக்கொண்டிருக்க, அவரோ தங்கள் பிள்ளை உயிரை மாய்த்துக்கொள்ளக் காரணமாக இருந்துவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்கள் கிரணுடைய பெற்றோர்.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.





