வவுனியாவில் 22 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

294

22 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர் கப்ரக வாகனம் ஒன்றை வழிமறித்து அதில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் கஞ்சா கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வாகனத்தில் இருந்த இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், அதில் இருந்த 22கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டது.

குறித்த கஞ்சா போதைப்பொருள் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுரங்க வீரரத்தின தலைமையில் பொலிஸ் பரிசோதகர் இலங்கசிங்க, மற்றும் திசாநாயக்க (37348), கீர்த்தி ரத்ன (48001), குமார(63340), ரட்னசேகர(6762), றெஜினோல்ட் (68300), ரணில்(81010), கலாகிரு(85763), குமார(87334), சகரான் (22449), பிரதீஸ்(99695) ஆகியோரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.