பூனையை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியவருக்கு நேர்ந்த கதி!!

154

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி குறித்து விசாரணையை முன்னெடுத்த வலப்பனை பொலிஸார், அந்த காணொளியுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

பூனையை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தும் நபர் பற்றிய காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. இதனையடுத்து விலங்கு உரிமை அமைப்புகள் உட்பட பல தரப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதற்கமைய, காணொளியில் தோன்றும் சந்தேக நபர் வலப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் திப்பட்டுகொட பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பூனையின் உரிமையாளர் ஆவார்.

குறித்த நபரை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபரின் மனநிலையை பரிசோதித்து மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.