
இந்தியாவில் சமூக ஊடகங்களுக்கு மிகக்கடுமையான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு எதிர்வரும் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளது.
சட்டவிரோதமானதாகக் கருதப்படும் பதிவுகளை வெறும் 03 மணித்தியாலங்களுக்குள் நீக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய கட்டுப்பாடாகும். இதற்கு முன்னர் நிறுவனங்களுக்கு 36 மணித்தியாலங்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இனி வரும் காலங்களில் நீதிமன்றம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி உத்தரவிட்ட 03 மணித்தியாலங்களுக்குள் அந்தப் பதிவை நீக்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவும் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் போலி வீடியோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு செய்தி வைரலாகி சமூகப் பதற்றத்தை உருவாக்கும் முன்பே அதை முடக்குவதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை இந்தியாவின் புதிய கட்டுப்பாடுகளை செயல்படுவது மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் போன்ற சமூக ஊடக நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.





