
பாதெனிய – அநுராதபுரம் வீதியில் கல்கமுவ, மெதகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





