மருத்துவமனையிலிருந்து ஓட்டமெடுத்த நித்யானந்தா!!

569

ஆண்மை பரிசோதனை சரியாக முடியவில்லை என்ற போதிலும் விரைவாக மருத்துவமனையை விட்டு நித்யானந்தா சென்றுள்ளார்.

“நித்யானந்தா என்னை கற்பழித்துவிட்டார்’ என நித்தியின் சிஷ்யை ஆர்த்திராவ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த செப்டம்பர் 8ம் திகதி உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடக பொலிசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் ஆண்மைப் பரிசோதனை முடிந்ததும் குரல் பரிசோதனைக்காக மடவாலாவில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக “ஜீரோ சிக்னல்’ ஏற்படுத்தித் தர வேண்டும்’ என கெஞ்சிக் கேட்டு சிறப்பு அனுமதியை பொலிசார் வாங்கியிருந்தனர்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு எதுவும் சாப்பிடாமல் வரவேண்டும் என்ற மருத்துவர் கூறியபோது தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

எனினும் அதை ஏற்க மறுத்த மருத்துவர், வெறும் வயிறுடன் தான் வரவேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதன்பின் பெங்களூர் விக்டோரிய மருத்துவமனைக்கு சென்ற நித்யானந்தா, பரிசோதனைக்கு சரியாக ஒத்துழைக்காமல் தனக்கு உடல்நிலை சரியில்லை என தட்டிக்களித்துள்ளார்.

இறுதியில் சோர்வுற்ற நிலையில் இருப்பது போல் தோற்றத்துடன் வெளியே வந்த அவர் விரைவாக தனது காரில் ஏறி நொடியில் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

அதிவேகமாக போய்க் கொண்டிருந்த இவரது கார் ஒரு பைக் மீது மோதியதில் பைக்கில் வந்தவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். எனினும் அதை பொருட்படுத்தாமல் ஒரே ஒட்டமாக ஓடிவிட்டார் நித்யானந்தா.

N1 N