சட்டத்தரணி மற்றும் மனைவி மீது துப்பாகிச்சூடு : இலக்கத்தகடு கண்டுபிடிப்பு!!

212

தலங்கம- அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற சிற்றூந்தின் இலக்கத் தகட்டை கொட்டாவை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

நேற்று (13) மாலை அக்குரேகொட பகுதியிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

சிற்றூந்தில் இருந்த 45 வயதான சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது 42 வயதுடைய மனைவி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சிற்றூந்தில் வந்த இருவர், கீழே இறங்கி டி-56 ரக துப்பாக்கி மற்றும் 9 மில்லிமீற்றர் பிஸ்டல் மூலம் சிற்றூந்தின் இருபுறமும் நின்று சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற சிற்றூந்து, உந்துருளி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது சிற்றூந்தின் இலக்கத் தகடு கீழே விழுந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

இந்நிலையில் சந்தேக நபர்களின் இலக்கத் தகட்டை தற்போது கொட்டாவை காவல்துறை கைப்பற்றியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.