
சென்னையில் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் பொலிஸ் ஒருவரின் மடியில் போதை ஆசாமியின் உட்கார்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் ஒருவர் நேற்று மாலை பாரிமுனை செல்லும் மாநகர பேருந்தில் இருந்துள்ளார். காட்டுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடியே ஏறியுள்ளார்.
இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் பொலிஸ் அமர்ந்து இருந்த இருக்கையின் அருகே உளறியபடி சென்ற அவர் தன்னருக்கில் இருப்பது இருக்கை என நினைத்து திடீரென பெண் பொலிசின் மடியில் அமர்ந்துள்ளார்.
அப்போது அதிர்ச்சி அடைந்த பெண் பொலிஸ் கூச்சலிட்டதால் உடனே மற்ற பயணிகள் போதை ஆசாமியை கிழே இரக்கி தர்ம அடி கொடுத்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.





