பெண்களை கைத்தொலைபேசியில் படம் பிடித்த இளைஞரை எரித்து கொன்ற 5 பேர்!!

613

Murder

சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்கள் குளிப்பதை கைப்பேசியில் படம் எடுத்த இளைஞரை 5 பேர் எரித்து கொன்றுள்ளனர்.

சுங்குவார்சத்திரம் அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (20) திங்கள்கிழமை காலை கிராமத்துக்கு வெளியே, உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியதை பொது மக்கள் பார்த்துள்ளனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இறப்பதற்கு முன்னதாக சுதாகர் சென்னை மாநகர குற்றவியல் நீதிபதியிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில், என் பக்கத்து வீட்டில் வசிக்கும் கன்னியப்பனின் மகள்கள் குளிக்கும்போது நான் எட்டிப்பார்த்ததாக கூறி, கன்னியப்பன் சண்டையிட்டார்.

இதையடுத்து கன்னியப்பன், முருகன், சங்கர், குமார், மற்றொரு முருகன் ஆகியோருடன் வந்து, நான் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மடக்கி, உடலில் பெட்ரோலை ஊற்றி எரித்துவிட்டு தப்பியுள்ளனர்.

இந்த வாக்குமூலத்தை அடுத்து ஸ்ரீபெரும்புதூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து கன்னியப்பன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசாரணையில் கன்னியப்பன் கூறுகையில், எனது மகள்கள் குளிக்கும் போதும், வீட்டில் இருக்கும் போதும் மாடியில் நின்று சுதாகர் செல்போனில் படம் பிடித்தார்.

இதனை நாங்கள் கண்டித்தும் அவர் செல்போனில் படம் பிடிப்பதை நிறுத்தவில்லை. இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நான், பெட்ரோல் ஊற்றி எரித்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.