
கிழக்கு உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததற்கு அதிக சக்தியும், வேகமும் கொண்ட பொருள்கள் விமானத்தை தாக்கியதே காரணம் என்று நெதர்லாந்து பாதுகாப்பு சபை சார்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மலேசிய பயணிகள் விமானம் எம்எச் 17, கிழக்கு உக்ரைனில் கடந்த யூலை 17ம் திகதி நொறுங்கி விழுந்தது. இதில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நெதர்லாந்து பாதுகாப்பு சபையின் இடைக்கால அறிக்கையில், விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறோ அல்லது விமானிகளின் செயல்பாடுகளோ காரணம் இல்லை, தாக்குதலே காரணம் என்று கூறியுள்ளது.
விமானத்தின் கறுப்பு பெட்டிகள், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள், உக்ரைன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அளித்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.





