அக்குரேகொட இரட்டைக்கொலை – தீப்பற்றி எரிந்த சந்தேகத்துக்குரிய கார் அதிகாரிகளால் பரிசோதிப்பு!!

146

காலி – பத்தேகம, அகலிய பகுதியில் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட, சந்தேகத்துக்குரிய காரை பரிசோதிக்கும் நடவடிக்கையில் அரச பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 13ஆம் திகதி அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் குறித்த காரை பயன்படுத்தியிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) காலி, அகலிய – குட்டியாவத்தையில் உள்ள உள்வீதியில் வைத்தே இந்தக் காரை நுகேகொடை பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

அக்குரேகொடயில் இடம்பெற்ற குறித்த இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார் அகலிய பகுதியில் கைவிடப்பட்டிருந்ததாக,

தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த இடத்துக்குச் சென்று பொலிஸார் பார்வையிட்டபோது அந்தக் கார் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.