5 குழந்தைகளை மண்ணில் கொன்று புதைத்த தந்தையின் வெறிச்செயல்!!

526

Dad

அமெரிக்காவில் 5 குழந்தைகளை கொன்று புதைத்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் தம்பதியினர் ஒருவர் தங்களது 5 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவகாரத்து பெற்றுள்ளனர். சில நாட்களாக தனது குழந்தைகளை தொடர்பு கொள்ள இயலவில்லை என்பதால் இது தொடர்பாக தனக்கு அச்சமாகவும், சந்தேகமாகவும் உள்ளது என பொலிசில் குழந்தைகளின் தாய் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த குழந்தைகள் வளர்ந்துவந்த வீட்டை சோதனையிட பொலிசார் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இந்த புகார் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் காணாமல்போன குழந்தைகளின் தந்தை மிஸிஸிப்பி பகுதியில் பார்த்த பொலிசார் அவரை பிடித்து கைது செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அலாபமா அருகேயுள்ள வில்காக்ஸ் கவுண்ட்டியின் நெடுஞ்சாலை வனப்பகுதியில் தனது 5 குழந்தைகளை புதைத்தாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன்பின் அங்கு புதைக்கப்பட்டிருந்த ஒன்று முதல் எட்டு வயதுக்குட்பட்ட அந்த 5 குழந்தைகளின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பி வைத்துள்ளனர்.