வவுனியாவில் விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்தால் நெல் கொள்வனவு!!

29

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டத்தின் கீழ் கொள்வனவு இடம்பெற்று வருகின்றன.

விவசாய அமைச்சின் செல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலையில் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது.

இதனடிப்படையில் நாடு (வெள்ளை – சிகப்பு) நெல் கிலோ 120 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதுடன் ஆர்வத்துடன் பல விவசாயிகள் நெல்லிணை வழங்கி வருகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு 0212060913 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும் எனவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.