மட்டக்களப்பில் 9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை : சந்தேகநபர் தலைமறைவு!!

552

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாயில் 9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் சுமார் 4.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

மஞ்சந்தொடுவாய் – ஜின்னா வீதியைச் சேர்ந்த, எம்.ஆர்.சஹாப்தீன் பாத்திமா சீமா என்ற சிறுமியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலத்தை பை ஒன்றால் கட்டி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருதாவது,

மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் குறித்த சிறுமி, அயலவர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, பையொன்றினால் கட்டப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.

மேலும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்யதாக சந்தேகிக்கப்படும் நபரின் சகோதரியின் வீட்டிலிருந்தே குறித்த சிறுமி உணர்விழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் இன்று மழை பெய்துள்ளது. இதன்போது, சிறுமியின் வீட்டுக்கு வந்த குறித்த அயலவருக்கு சிறுமியின் தாய் குடையொன்றை கொடுத்ததுடன், குடையை வாங்கி வருமாறு கூறி சிறுமியையும் அனுப்பியுள்ளார்.

எனினும் நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததையடுத்து, சிறுமியின் குடும்பத்தினரும் அயலவர்களும் சிறுமியை தேடியுள்ளனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் பை ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் மரணம் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

1 2 3 4