நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!!

149

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல்தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கடும் மின்னல் தாக்கத்துடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும்,

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.