
காலி – நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு 32 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயான மஹாபடகே இரேஷா மதுமாலி என்பவர் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தமை காரணமாக கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தனது மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை, வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த பெண்ணுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டு முற்றத்தில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இன்று காலை அவர் தானாக முன்வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
34 வயதான குறித்த நபர் பெண்ணின் சட்ட ரீதியான கணவர் எனவும் அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேக நபர் இன்று (20) உடுகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.





