
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். அந்த வகையில் சந்தையில் ஒரு முட்டை 35 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பல்பொருள் அங்காடிகளில் ஒரு முட்டை 55 – 60 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.

இதேநேரம் சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1300 ரூபாவிற்கு அதிக விலையில் விற்கப்படுவதாக தெரியவருகிறது.
விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரித்ததால், அதிகரித்த விலையில் விற்க வேண்டியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த நாட்களில் சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விநியோகத்தில் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.





