
கேகாலையில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. யாட்டியாந்தோட்ட, ஹக்பெல்லாவக்க பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், வீட்டில் இருந்த மூன்று சிறுவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்த மூன்று இந்தியப் பிரஜைகள் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





