
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறையால் நுகர்வோர் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது.
எரிவாயு பற்றாக்குறை காரணமாக வணிக நடவடிக்கைகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார்.
இதன் போது தேவையான எரிவாயு இருப்புக்களை பொதுமக்களுக்கு விடுவிப்பது உரிய எரிவாயு நிறுவனங்களின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.

லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தால் திட்டமிட்ட வகையில் சமையல் எரிவாயுவை வழங்க முடியாவிட்டால், அது தொடர்பாக முடிவை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளாந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நாளைக்கு வெளியிடப்படும் எரிவாயு அடங்கிய சிலிண்டர்களின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் இந்த பற்றாக்குறையை சமாளிக்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.





