சமூக வலைத்தளங்களில் வைரலான குரங்குக் குட்டி : கூட்டத்துடன் இணைந்ததால் ஆனந்தம்!!

15

தனித்து , குரங்கு பொம்மையுடன் திரிந்து பெருமளவு இணையவாசிகளின் மன்ம் கவர்ந்த குரங்குட்டி தற்போது குரங்கு கூட்டத்துடன் இணைந்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.

ஜப்​பானில் உள்ள ஓர் உயி​ரியல் பூங்​கா​வில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்​காவ் வகை குரங்கு குட்​டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்​டியை மட்​டும் அந்த தாய் குரங்கு விரட்டியது.

உயி​ரியல் பூங்கா நிர்​வாகி​கள் அந்​தக் குட்​டிக் குரங்​குக்கு தனியிடத்தை ஏற்​பாடு செய்து அது விளை​யாடி மகிழ உர்​ராங் உடான் வகை குரங்கு பொம்​மை​யைக் கொடுத்​தனர்.

இந்​தக் குரங்​குக் குட்​டிக்கு `பஞ்ச்’ என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மை​யுடன் குட்​டிக் குரங்கு விளை​யாடி வந்​த வீடியோ, புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலானது .

மக்​காவ் குரங்​கு​கள் மிக​வும் புத்தி கூர்​மை​யானவை. பனி பிரதேசத்​தில் வாழும் இவை, உணவு​களை கழுவி உண்​ண​வும், உப்பு சுவைக்​காக கடல் நீரை சேர்த்​துக்​கொள்​ள​வும் தெரிந்து வைத்​துள்​ளன. மனிதர்​களை போல உடலை சூடாக வைத்​துக்​கொள்ள வெந்​நீர் தொட்​டிகளில் இவை குளிக்​கின்​றன.

இது குறித்து உயி​ரியல் பூங்கா காப்​பாளர் கோசுக்கே ஷிகானோ கூறும்​போது, “பஞ்ச் குரங்​குக்​குட்டிக்கு இப்​போது ரசிகர்​கள் அதி​க​மாகி விட்டனர். உர்​ராங் உடான் குரங்கு பொம்​மை​யுடன் பஞ்ச் விளையாடி வரு​கிறது.

பிற்​காலத்​தில் இது தனது இனத்​தோடு சேர்ந்து வாழ இந்த பொம்மை உதவும்” என்​றார். குரங்​குக்​குட்​டியை வாங்​கு​வதற்கு பிரபல தொழில​திபர் டிரிஸ்​டன் டேட் முன்​வந்​துள்​ளார். இதற்​காக 25 ஆயிரம் டாலர் தரவும் அவர் முன்​வந்​தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஊடக​விய​லா​ள​ரும், தொழிலதிபருமான எமோரி ஆண்ட்ரூ டேட்​டின் தம்​பி​தான் இந்த டிரிஸ்​டன் டேட். இந்​நிலை​யில் குட்​டிக்​குரங்கு பஞ்ச் தனது குரங்​குக் கூட்​டத்​துடன் மீண்​டும் ஒன்​றிணைந்​துள்​ளது.

குரங்​குக் கூட்​டத்​தில் உள்ள குரங்கு​களு​டன் அது இணைந்து விளை​யாடி வரு​கிறது. இதுதொடர்​பான வீடியோக்களும் சமூக வலை​தளங்​களில்​ வெளி​யாகி வைரலாகியுள்​ளன.