தென்னிலங்கை கடற்கரையில் மர்மமான முறையில் பெண்ணின் சடலம் : பெண் கும்பலின் அட்டகாசம்!!

117

மொரட்டுவ கடற்கரையில் நேற்று பெண்ணின் சடலம் வீசப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மொரட்டுவ, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் சடலமே கண்டெடுக்கப்பட்டது.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறு இருந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது கொலையா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.