வவுனியாவில் பாரதியார் நினைவு தினம்!!

1353

Parathi

மகாகவி சுப்பிரமணியப் பாரதியாரின் நினைவு தினம் இன்று வியாழக்கிழமை வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள அவரது உருவச் சிலை முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தைச் சேர்ந்த கவிஞர் மாணிக்கம் ஜெகன் உள்ளிட்ட அப் பகுதி வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

-நன்றி மலரும்-