கேள்விக்குறியில் இலங்கை – இந்திய அணிகளின் அரையிறுதி கனவு!!

21

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தற்போது தொடரின் சூப்பர் 08 சுற்றுகளிலிருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை அணியும், தென்னாபிரிக்காவிடம் தோற்ற இந்தியா அணியும் மோசமான நிகர ஓட்ட விகிதத்தைக் கொண்டுள்ளன.

மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்தால், குறித்த இரு அணிகளும் சூப்பர் எட்டு சுற்றுகளில் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

புள்ளிகள் சமநிலையில் இருப்பதால், தற்போதைய மோசமான நிகர ஓட்ட விகிதம் இலங்கை மற்றும் இந்திய அணி இரண்டிற்கும் பாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், குறித்த அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், போட்டியில் அரையிறுதி செல்வதற்கான இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.