லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு : வர்த்தகர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

38

சந்தையில் தேவையில்லாமல் எரிவாயு இருப்புகளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தக முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

எரிவாயு இருப்புகளை தேவையில்லாமல் பதுக்கி வைக்கும் வர்த்தக முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில்,எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3,900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவுடனான கப்பல் ஒன்று நேற்று (23) நாட்டை வந்தடைந்துள்ளது.

மேலும் நாளை (25) மற்றும் 28ஆம் திகதி 7,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.