குளிர்சாதனப் பெட்டியில் இருந்த சிங்கம் : மிரண்டுபோன அதிகாரிகள்!!

632

பிரித்தானியாவில் உணவு விடுதி ஒன்றின் குளிர்சாதனப் பெட்டியில் சிங்கம் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸ் நகரில் விலங்கியல் பூங்கா ஒன்றின் அருகில் உள்ள உணவகத்தின் குளிர்சாதன பெட்டியில் இறந்த சிங்கம் ஒன்று இருந்துள்ளது.

இந்நிலையில் உணவகத்தை மேற்பார்வையிட வந்த சுகாதார துறை அதிகாரிகள் இறந்த நிலையில் சிங்கம் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறும் உணவுகள், அந்த இறந்த சிங்கத்தின் அருகில் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது, தனது நாய்க்கு உணவளிக்க இந்த சிங்கத்தின் இறைச்சியை வைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து இந்நபர் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் உணவகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் இந்த சிங்க இறைச்சியை தவிர வேறு எந்த பிரச்சனையும் அங்கு இல்லை என்பதால் உணவகம் வழக்கம் போல் செயல்பட அனுமதி அளித்துள்ளனர்.

L L1