ஆண்டின் முதல் சந்திர கிரகணம் : இந்த ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது!!

20

சந்திர கிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வாகும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் மாதத்தில் நிகழவுள்ளது மற்றும் இது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த சந்திர கிரகணம் மார்ச் 03 ஆம் திகதி நிகழவுள்ளது.

முக்கியமாக இந்த சந்திர கிரகணமானது சூரிய பகவானின் சிம்ம ராசியில் நிகழவுள்ளது. இதன் காரணமாக இந்த சந்திர கிரகணம் சற்று சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்படி நிகழும் சந்திர கிரகணத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அதுவும் இந்த சந்திர கிரகணம் சிம்ம ராசியில் நிகழ்வதால் மரியாதை, அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

மேஷம்: இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ஜோதிடத்தின் படி செவ்வாயும் சூரியனும் நட்பு கிரகங்களாவர். இதனால் இந்த சந்திர கிரகணத்தால் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாயப்புக்களைப் பெறுவார்கள்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக நடக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தை நம்பாமல் கடினமாக உழைத்தால் நல்ல பலனைப் பெறலாம்.

சிம்மம் : ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக முதலீடுகளை செய்வதால் இருந்தால் , புத்திசாலித்தனமாக யோசித்து பின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு: 2026 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வாழ்க்கையில் ஒரு பெரிய நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் கடினமாக உழைக்க நேரிடும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.