தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல் : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

337

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (27.02.2026) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 370,000 ரூபாவாக காணப்படுகிறது. அத்துடன் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக தொடர்ந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இலங்கையில் தங்க விலை மாற்றமின்றி தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக சந்தையில் இன்றைய தினம் (27.02.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் 5187 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது உலக சந்தையில் 5158 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த விலை மாற்றமானது இலங்கையிலும் தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்கனவே 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவிலேயே நிலை கொண்டுள்ளது.

இவ்வாறான சூழலில் நகை வாங்க காத்திருப்போர் தமக்கான சாதகமான சூழலை நோக்கி எதிர்பார்த்திருக்கும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலையானது 6 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவ்வருடத்தில் தொடும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.