இலங்கையில் ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்துள்ள தங்கத்தின் விலை!!

764

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இலங்கையின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று ஒரே நாளில் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 410,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,413 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.