நடுவீதியில் கை, கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை!!

43

களுத்துறை – பாணந்துறையில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, ஞானசேன மாவத்தையில் வசித்து வந்த 37 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்த கொலை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.